இன்றைய வாழ்க்கை சூழலில் அனைத்து நபர்களும் சினிமா என்ற ஒன்றை ஏதேனும் ஒரு கட்டத்தில் நாடி வருகிறார்கள். அதில் பெரும்பாலானோர் பொழுதுபோக்கு விஷயங்களுக்காக மட்டுமே வந்து சேர்கிறார்கள்.
எங்களின் நோக்கம் சினிமா என்பது பொழுது போக்கை தாண்டி ஒரு கலைஞன் தன்னுடைய படைப்பில் கொடுத்துள்ள அனைத்தையும் பார்வையாளனாய் அனைத்து நேரங்களிலும் எளிதாக புரிந்து கொள்ள முடியாது அப்படியான விஷயங்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே.
சினிமாவில் உள்ள கதைக்களம் கதைக்கரு அதேபோன்று முன்பின் வரலாறுகள் போன்று பல்வேறு விஷயங்கள் எங்களுடைய இயங்குதளத்தில் விமர்சனங்கள் ஊடாக உங்களுக்கு கிடைக்கும்.
பெரும்பாலும் உலக சினிமாக்களை பெருமளவு எங்களது தளத்தில் நீங்கள் பெறலாம். எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் சமநிலையில் இருந்து அனைத்து திரைப்படங்களையும் நாங்கள் விமர்சிக்கிறோம்.
திரைப்படங்கள் பார்த்து அதன் பின் அந்த திரைப்படத்தில் உள்ள பல்வேறு விஷயங்களை தேடி தெரிந்துகொண்டு அவற்றை மிகப்பெரிய சினிமா ஆர்வம் கொண்டவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்கான எங்களுடைய சிறிய முயற்சியே இந்த தளம்.
தினம் தோறும் பல்வேறு பதிவுகள் சினிமா சார்ந்து சினிமா படங்கள் சார்ந்து பதிவிட உள்ளோம். தொடர்ந்து எங்களது பதிவுகளை படித்து உங்களது ஆதரவை எங்களுக்கு தெரிவியுங்கள்.
